ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று.
1945 ஆம் ஆண்டு உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே, கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது.
அந்தந்தப் பகுதியின் பண்பாடு மற்றும் வரலாற்றுத் திட்டங்களை உயர்த்துதல் உலக பண்பாடு மற்றும் இயற்கை மரபுரிமை இவற்றை பாதுகாக்க உலகளாவிய ஒத்த்துழைப்பு ஆகியவை இதன் திட்டங்கள் ஆகும்.
இந்த அமைப்பு தற்போது தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து கேள்வி எழுப்பி உள்ளது.
தஞ்சாவுர் மாவட்டத்தில், திருவிடைமருதுர் தாலுக்காவில் கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் 12வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது மானம்பாடி கிராமம்.
மானம்பாடியில், மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட, 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் எவ்வித நியாயமான காரணங்களும் இல்லாமல் இடிக்கப்பட்டுள்ளது.
புராதன சிலைகள், கோயில்களை பராமரிக்கும் கட்டமைப்பு, தமிழக இந்து சமய அறநிலையத்துறையிடம் இருக்கிறதா? -என்று யுனெஸ்கோ கேள்வி எழுப்பியுள்ளது.
எந்த வித நியாயமான காரணங்கள் இன்றி, மானம்பாடி கோயில் ஏன் இடிக்கப்பட்டது? என்று மேலும் கேட்டுள்ளது.
இதற்கு தமிழக அரசின் சார்பில் பதில் அளிக்க முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது.